திருவனந்தபுரம், ஜுலை 10- தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பிறருடன் தொடர்புடைய பாஜக தலைவர் களின் பங்கு தெரியவந்ததைத் தொட ர்ந்து காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் உற வினர்களிடமும் விசாரணை விரிவ டைந்துள்ளது. சுங்கத்துறை அதிகாரி களை அழைத்து பார்சலை விடுவிக்கு மாறு மிரட்டியபோது தொழிற்சங்கத் தலைவர் ஹரிராஜன் மத்திய அர சில் பெரும் செல்வாக்கு உள்ளவர். மலப்புறம், கோழிக்கோடு மாவட் டங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பி னர்கள் உட்பட பல காங்கிரஸ் மற்றும் லீக் தலைவர்களின் உறவினர்கள் மீதும் சுங்கத்துறையினர் விசார ணையை துவக்கி உள்ளனர். வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதால், விசாரணை யின் போக்கு மாறும். முடிச்சு இறுக வாய்ப்புள்ளது. பாஜக-யுடிஎப் உற வின் முடிச்சு அவிழத் தொடங்கிய தும், விசாரணையை தகர்ப்பதற்கும் தீவிர முயற்சி நடக்கிறது. மத்திய முகமைகளின் விசாரணை கோரி முதல்வர் பினராயி விஜயன் அனுப் பிய கடிதத்திற்கு மத்திய அமைச்சர் வி.முரளீதரனும் யுடிஎப் தலைவர் களும் பதிலளிக்கவில்லை.
தங்கம் கடத்தி வரப்பட்ட பார் சலை விடுவிக்குமாறு சுங்கத்துறை யின் அதிகாரியை தொடர்பு கொண் டதை வியாழக்கிழன்று நடந்த விசா ரணையில் ஹரிராஜன் ஒப்புக் கொண் டார். சுங்க தீர்வு முகவரின் வேண்டு கோளைத் தொடர்ந்தே இவ்வாறு தொடர்பு கொண்டதாக அவர் நியா யப்படுத்தியுள்ளார். கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது குடியிருப்புகளை சுங்க அதிகாரி கள் சோதனை செய்தனர். வெள்ளி யன்று காலை கொச்சி சுங்கத்துறை இயக்குநர் அலுவலகத்தில் ஒ.ஜி.ஹரிராஜிடம் மீண்டும் விசாரணை நடந்தது. கடத்தலின் முக்கிய புள்ளியான பாஜக ஊழியர் சந்தீப் நாயர் தலை மறைவாக உள்ளார். பாஜக தலை வரின் காரில் திருவனந்தபுரத்தில் இருந்து சொப்னா சுரேஷும் சந்தீப் நாயரும் தப்பிச் சென்றனர். சொப்னா சுரேஷின் முதல் ஆதரவாளர் முன் னாள் மத்திய அமைச்சர் ஏஐசிசி பொதுச் செயலாளர் கே.சி.வேணு கோபால் என்று பாஜக செய்தித் தொடர் பாளர் பி கோபாலகிருஷ் ணன் குற்றம் சாட்டினார். இந்நிலையில் வெள்ளியன்று கேபிசிசி தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி ஆகி யோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பாஜகவின் குற்றச்சாட் டுக்கு மறுப்பு தெரிவித்தனர்.